இதற்காக தான் சீரியலில் இருந்து விலகினாரா பிரியங்கா நல்காரி? வைரலாகும் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Sunday,May 19 2024]

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ’நள தமயந்தி’ என்ற சீரியலில் பிரியங்கா நல்காரி நடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் அந்த சீரியலில் விலக இருப்பதாக செய்திகள் பரவியது. இதையடுத்து அவருக்கு பதிலாக ஸ்ரீநிதி என்பவர் நடிக்க போவதாக கூறப்பட்ட நிலையில் திடீரென ஜீ தமிழ் சேனல் இந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த சீரியலின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்ததாகவும் அதில் பிரியங்கா கேரக்டர் இறந்து விட்டதாக புகைப்படத்தில் காண்பித்து அவருக்கு எல்லோரும் அஞ்சலி செலுத்துவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ’நள தமயந்தி’ தொடரில் ஹோட்டல் நடத்திக் கொண்டிருக்கும் கேரக்டரில் பிரியங்கா நடித்திருந்த நிலையில் நிஜ வாழ்க்கையில் அவர் ஹோட்டலை தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஹோட்டல் திறப்பு விழா புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். ஹோட்டல் பணிகளை இனிமேல் பிரியங்கா தான் மேற்கொள்ளப் போகிறார் என்றும் அதனால் தான் அவர் சீரியல் இருந்து விலக முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து தொழிலதிபர் ஆகியுள்ள பிரியங்கா நல்காரிக்கு ரசிகர்களும் சக நடிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா?

விஜய் டிவியில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் மாதம் இறுதி வாரத்தில் ஆரம்பித்தது என்பதும் மூன்று வாரங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது நான்காவது வாரம் விறுவிறுப்பாக ஒளிபரப்பானது என்பதும்

இந்த முறை கல்வி விழாவில் வேற லெவல் திட்டம் வைத்திருக்கும் தளபதி விஜய்.. தவெக நிர்வாகிகள்..!

தளபதி விஜய் கடந்தாண்டு 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த ஒவ்வொரு மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகளை நேரில் அழைத்து சிறப்பு பரிசு கொடுத்தார்

குல தெய்வ வழிபாடு: சக்தி தாசன் அவர்களின் வழிகாட்டுதல்

பிரபல ஆன்மீக அன்பர் சக்தி தாசன் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், குல தெய்வ வழிபாடு பற்றிய விரிவான விளக்கத்தை அளித்துள்ளார்.

பாடகி ஸ்ரீநிஷா வாழ்க்கையின் முக்கியமான நபர் ஹிப் ஹாப் ஆதியா ?

மேலும் ஹிப் ஹாப் ஆதி அண்ணா என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நபர் ஆவார்.எனக்கு திருப்பத்தை கொடுத்த படம் என்றால் அவை விளம்பர இடைவெளி படம் தான்...

அதர்வா அடுத்த படத்தில் அறிமுகமாகும் இன்ஸ்டா பிரபலம்.. லைகா தயாரிப்பு..!

நடிகர் அதர்வா நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் இன்ஸ்டாகிராமில் பிரபலமான ஒருவர் நாயகியாக அறிமுகமாக இருப்பதாகவும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.