பிரியங்கா மோகனுக்கு அடித்த சூப்பர் அதிர்ஷ்டம்.. யாருக்கு ஜோடியாகிறார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ மற்றும் ’டான்’ படங்களில் நடித்த பிரியங்கா மோகன் தற்போது பிரபல நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். அதன்பின் சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ சிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ ஆகிய திரைப்படங்களில் நடித்தார். தற்போது அவர் தனுஷ் நடித்து வரும் ’கேப்டன் மில்லர்’ மற்றும் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சற்றுமுன் அவர் பவன் கல்யாண் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பவன் கல்யாண் நடிப்பில் உருவாக ’OG’ என்ற படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
நடிகை பிரியங்கா மோகன் தனது சமூக வலைத்தளத்தில் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். இந்த படத்தில் தான் நடிக்க இருப்பதை நினைத்து பெருமைப்படுவதாகவும் ஒரு நல்ல என்டர்டைன்மென்ட் படம் விரைவில் ரசிகர்களுக்கு கிடைக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
𝑷𝑹𝑰𝒀𝑨𝑵𝑲𝑨 𝑴𝑶𝑯𝑨𝑵… We are very happy & excited to have you on board for #OG. ❤️@PawanKalyan @PriyankaaMohan @sujeethsign @dop007 @MusicThaman #ASPrakash @DVVMovies #FireStormIsComing#TheyCallHimOG pic.twitter.com/OMED1rGkrF
— DVV Entertainment (@DVVMovies) April 19, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments