சிவகார்த்திகேயனின் 'டான்' பட நாயகி: அதிகாரபூர்வ அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் டைட்டில் ‘டான்’ என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது
இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும் என்றும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க பிரியங்கா மோகனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டது
இந்த நிலையில் சற்று முன் லைகா நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் ‘டான்’ படத்தின் நாயகியாக பிரியங்கா மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரியங்கா மோகனை தங்களுடைய படத்தில் வரவேற்பதாகவும் புதிய போஸ்டர் ஒன்றையும் லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ படத்திலும் ப்ரியங்கா மோகன் தான் ஜோடியாக நடித்தார் என்பதும் இந்த படம் வரும் மார்ச் 26ஆம் தேதி வெளியாக போகிறது என்ற நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்திலும் பிரியங்கா மோகன் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
மேலும் ‘டான்’ படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் இவர் இந்த படத்தில் வில்லனாக நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Happy to welcome @priyankaamohan onboard for #DON @Siva_Kartikeyan @anirudhofficial @iam_SJSuryah @KalaiArasu_ @SKProdOffl @Dir_Cibi @DONMovieOffl @DoneChannel1 pic.twitter.com/btpsYDaHXA
— Lyca Productions (@LycaProductions) February 3, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments