'கேப்டன் மில்லர்' படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த பிரியங்கா மோகன்.. வைரல் புகைப்படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தனுஷின் காட்சிகள் ஏற்கனவே படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது தனுஷ் அல்லாத காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக நாயகி ஆக நடித்த பிரியங்கா மோகன் காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ், பிரியங்கா மோகனின் புகைப்படத்தை வெளியிட்டு அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளதையும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இதே புகைப்படத்தை பிரியங்கா மோகனும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, தன்னுடைய காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் ட்ரெய்லர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிவி பிரகாஷ் இசையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகிய இந்த படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், விஜி சந்திரசேகர், பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிய இந்த படத்திற்கு மதன் கார்க்கி வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Andddd that’s how we wrap💥#CaptainMiller releasing on December 15th ,2023… stay tuned .. https://t.co/XFr2ta4jL1
— Priyanka Mohan (@priyankaamohan) August 30, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments