பிரியங்கா என் அக்கா இல்லை: அபிஷேக்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான அபிஷேக் மூன்றே வாரத்தில் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்ட நிலையில் மீண்டும் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக உள்ளே நுழைந்தார். ஆனால் இந்த முறையும் அவர் ஒரு சில நாட்களிலேயே மீண்டும் குறைந்து வாக்குகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டார்.
இந்த நிலையில் முதல் முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அனைவரது விளையாட்டையும் தானே விளையாட வேண்டும் என்ற முனைப்புடன் அபிஷேக் விளையாடியதாகவும், இரண்டாவது முறையாக சென்றபோது பிரியங்காவை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு விளையாடியதாகவும் அபிஷேக் மீது குற்றச்சாட்டு உள்ளது
இந்த குற்றச்சாட்டுக்கு நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அபிஷேக் கூறியபோது, ’பிக்பாஸ் வீட்டில் நான் ஜாலியாகவும் மகிழ்ச்சியாகவும் விளையாட என்னுடைய வருகை ஒரு காரணம் என்று பிரியங்காவே கூறினார் என்றும், மற்றவர்களுடைய விளையாட்டை நான் விளையாட வேண்டும் என்று நினைப்பது என்னுடைய திட்டம் என்றால் அதை நான் தொடர்ந்து செய்வேன் என்றும், பார்ப்பவர்களுக்கு அது தவறாக தெரிந்தால் அவர்களுக்கு தெரியாதவாறு இன்னொரு தடவை வாய்ப்பு கொடுத்தால் முயற்சி செய்வேன் என்றும் அபிஷேக் கூறியுள்ளார். மேலும் பிரியங்கா என்னுடைய அக்கா இல்லை என்றும் துர்கா தான் என்னுடைய அக்கா என்றும் அபிஷேக் கூறினார்.
அபிஷேக் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியின் முழு வீடியோ இதோ:
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com