மேலிடத்திலிருந்து வந்த முக்கிய அசைன்மெண்ட்...!பிரியங்கா காந்தி தமிழகம் வருகை...

  • IndiaGlitz, [Friday,March 26 2021]

தமிழகத்திற்கு காங்கிரஸ் சார்பாக பிரச்சாரம் செய்ய, பிரியங்கா காந்தி வர இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அதனுடன் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலும் நடைபெற இருக்கிறது. இத்தொகுதியில் எம்.பி-யாக இருந்தவர் தான் எச்.வசந்தகுமார். இவர் கொரோனா காலத்தில் மக்களுக்கு ஏராளமான சமூக சேவைகளையும், உதவிகளையும் செய்து வந்தார். கொரோனா தொற்று காரணமாக இவர் சமீபத்தில் உயிரிழந்ததால், தொகுதியில் இவரது மகன் விஜய் வசந்த் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுகிறார். வருகின்ற லோக்சபா இடைத்தேர்தலில் வென்றே தீர வேண்டும் என்ற முனைப்போடு விஜய்வசந்த் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இவருக்கு போட்டியாக பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் களமிறங்குகிறார். அண்மையில் இவர்கள் இருவரும் எதிர்ச்சையாக சந்தித்த பொழுது, கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். விஜய் மற்ற தலைவர்களை போல் இல்லாமல் இயல்பாகவும், பொறுமையுடனும் நடந்துகொண்டார்.

ஆனால் தமிழக சட்டமன்ற தேர்தல் களம் இங்கு சூடுபிடித்துள்ளதால், காங்கிரஸ் சார்பாக விஜய்க்கு பிரச்சாரம் செய்ய எந்த கூட்டணி பிரமுகர்களும் செல்லவில்லை. இத்தேர்தலிலே அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

பாஜக - தீவிர பிரச்சாரம்-

கட்டாயமாக கன்னியாகுமரியில் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வரும் பாஜக, பிரச்சாரத்தை சூடுபிடிக்க செய்து வருகிறது. ராதாகிருஷ்னன் ஜெயிக்க வேண்டும் என்பதில், உறுதியாக இருக்கும் தலைமை, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரடியாக இங்கு பிரச்சாரத்திற்கு இறங்கியுள்ளது. மேலும் முக்கிய பிரமுகர்கள் அங்கு பரப்புரை செய்து வருகிறார்கள்.

காங்கிரஸ் வியூகம் -

கன்னியாகுமரியில் காங்கிரசில் உள்கட்சி பூசல்கள் இருப்பதால், கட்சி தலைவர்கள் யாரும் பிரச்சாரத்திற்கு வருவதில்லை. இதனால் விஜய் வசந்த் தனது ஆதரவாளர்களுடன் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். இந்த நிலையில் கட்சியின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க மற்றும் பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கன்னியாகுமரி வருகிறாராம்.

விஜய் வசந்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய கட்சியின் தலைமை பிரியங்காவிற்கு அசைன்மென்ட் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. சோனிகாந்திக்கும், ராகுல் காந்திக்கும் விருப்பமான தலைவராக இருந்த வசந்தகுமார், காங்கிரசில் மிகவும் மதிக்கப்பட்ட தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.