விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்து தெரிவித்த ப்ரியங்கா சோப்ரா: காரணம் இதுதான்!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவனுக்கு பாலிவுட் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் விக்னேஷ் சிவன் பிறந்தநாளை அடுத்து இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று வெளியானது. இந்த பாடலில் விதவிதமான கெட்டப்புகளில் அனிருத் தோன்றி அசத்தி இருந்தார் என்பதும் இந்த பாடல் மிகப் பெரிய அளவில் இணையதளங்களில் வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த பாடலை பார்த்த பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். குறிப்பாக விக்னேஷ் சிவனுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிரியங்கா சோப்ராவின் இந்த வாழ்த்துக்கு விக்னேஷ் சிவன், அனிருத், சமந்தா உள்பட படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.