ஒபாமா அளிக்கும் விருந்தில் பங்கேற்கும் நாயகி
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் நடித்த 'தமிழன்' படத்தில் அறிமுகமான நடிகை ப்ரியங்கா சோப்ரா, அதன் பின்னர் எந்த தமிழ்ப்படத்திலும் நடிக்கவில்லை என்றாலும் பாலிவுட்டில் பிரபல நடிகையாக இன்று வரை வலம் வருகிறார். அதுமட்டுமின்றி தற்போது ஹாலிவுட்டிலும் அவர் கால்பதித்துள்ளார்.
Quantico என்ற தொலைக்காட்சி தொடரிலும், Bay Watch என்ற ஹாலிவுட் படத்திலும் ப்ரியங்கா சோப்ரா நடித்து வருவதால் அவர் அமெரிக்க ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்சேல் ஒபாமா அளிக்கும் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ப்ரியங்கா சோப்ராவுக்கு அழைப்பு வந்துள்ளது. நாளை நடைபெறவுள்ள இந்த விருந்தில் ப்ரியங்கா கலந்துகொள்ள உள்ளார். மேலும் இந்த விருந்தில் வில்ஸ்மித் உள்பட பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments