இங்கிலாந்து இளவரசர் திருமணத்தில் கலந்து கொள்ளும் விஜய் நாயகி
Send us your feedback to audioarticles@vaarta.com
இங்கிலாந்து நாட்டின் இளவரசர் ஹாரி அவரது காதலி மெர்க்கல் என்பவரை வரும் மே மாதம் 19ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளார். மன்னர் பரம்பரையின் இந்த ஆடம்பரமான திருமணத்தில் உலகப்புகழ் பெற்ற சுமார் 600 பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த நிலையில் விஜய் நடித்த 'தமிழன்' படத்தில் நடிகையாக அறிமுகமானவரும் பிரபல பாலிவுட் நடிகையுமான ப்ரியங்கா சோப்ரா இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ப்ரியங்கா சோப்ரா மணப்பெண் மெர்க்கலின் தோழி என்பதால் இந்த திருமணத்திற்கு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திருமணத்தில் கலந்து கொள்வது குறித்து ப்ரியங்கா சோப்ரா கூறியபோது, 'மெர்கல் கடந்த மூன்று வருடங்களாக எனது நெருங்கிய தோழி. அவரது திருமண நிகழ்ச்சியில் பங்கேற்வுள்ளது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. திருமணத்துக்கு பிறகு அவருடைய வாழ்க்கை முற்றிலும் மாறும் என்று நான் நம்புகிறேன். ஒரு தோழியாக அவரது திருமணத்தில் கலந்து கொள்வது எனக்கு மிகப்பெரிய பெருமை' என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout