ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய நடிகை பிரியங்கா சோப்ரா… என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
“தி ஆக்டிவிஸ்ட்“ எனும் ரியால்டி ஷோவில் கலந்து கொண்டதற்காக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளார். மேலும் ஆக்டிவிஸ்ட் ரியாலிட்டி ஷோ வணிக நோக்கத்திற்காக நடைபெறுகிறது என்றும் அதனை புரிந்துகொள்ளாமல் நான் ரசிகர்களை ஏமாற்றிவிட்டேன் என்றும் கருத்துத் தெரிவித்து உள்ளார்.
பாலிவுட் சினிமா நட்சத்திரமான நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 2002 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான “தமிழன்” திரைப்படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். அதற்குப் பிறகு பாலிவுட் தற்போது ஹாலிவுட் எனக் கொடிக்கட்டி பறந்து வருகிறார். இந்நிலையில் US TV நெட்வொர்க் மற்றும் CBS நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் “ஆக்டிவிஸ்ட்“ எனும் நிகழ்ச்சியில் நடிகை பிரியங்கா கலந்து கொண்டுள்ளார்.
இந்த ரியால்டி ஷோவின் ஆவணப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா நிகழ்ச்சியில் இருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியானது சமூக ஆர்வலர்களின் கவனத்தை திசைத் திருப்புவதாக அமைந்துள்ளது. மேலும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வடிவத்திலேயே இது அமைந்திருக்கிறது.
இந்த வடிவமைப்புக்காக ரசிகர்களுக்கு நான் ஏமாற்றத்தைக் கொடுத்துவிட்டேன். அதனால் நிகழ்ச்சியில் இருந்து விலகிக் கொள்கிறேன். ரசிகர்கள் என்னை மன்னிக்கவும் என்றும் தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்து உள்ளார். நடிகை பிரியங்கா சினிமா துறையில் மட்டுமல்ல யுனிசெஃப் தூதராகவும் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் சுகாதாரம் சார்ந்த பிரச்சனைகளுக்காக யுனிசெஃப் தூதராக செயல்பட்டு வரும் இவர் சமூக விஷயங்களிலும் தனது அக்கறையை காட்டி வருகிறார். அந்த வகையில் வணிக ரீதியாக நடத்தப்படுகிற ஆக்டிவிஸ்ட் நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டமைக்காக வருத்தம் தெரிவித்து தற்போது தனது ரசிகர்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளார்.
— PRIYANKA (@priyankachopra) September 16, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments