நான் டேட்டிங் செய்த அனைவருமே நல்லவர்கள்: பிரியங்கா சோப்ராவின் காதலர்கள் லிஸ்ட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகை ஒருவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் தற்போது திருமணத்திற்கு முந்தைய தனது காதல் குறித்து மலரும் நினைவுகளை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
நடிகை பிரியங்கா சோப்ரா ‘லவ் அகெய்ன்’ என்ற திரைப்படத்தில் அவர் நடித்துள்ள நிலையில் அந்த படம் இன்று வெளியாகிறது. இந்த நிலையில் ‘லவ் அகெய்ன்’ என்ற டைட்டிலுக்கு ஏற்ப தனது பழைய டேட்டிங் நண்பர்கள் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளார். ஷாஹித் கபூர், ஹனுமான் பவேஜா, ஷாருக்கான் ஆகியோர்களுடன் தான் டேட்டிங்கில் இருந்ததாகவும் தான் டேட்டிங்கில் இருந்த அனைவருமே மிகவும் நல்லவர் என்றும் கூறினார். ஆனால் அதே நேரத்தில் அந்த உறவு தொடர முடியாததற்கு பல்வேறு காரணங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக கடந்த 2013ஆம் ஆண்டு ஷாருக்கான் உடன் அவர் டேட்டிங்கில் இருந்தபோது டொரண்டோவில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலை ஷாருக்கான் மறுத்து இருந்தார் என்பதும் பிரியங்கா சோப்ரா எப்போதுமே தனது தோழி என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்க பாடகர் மற்றும் நடிகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்த பிரியங்கா சோப்ரா, அதன்பின் அவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிகள் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com