நான் டேட்டிங் செய்த அனைவருமே நல்லவர்கள்: பிரியங்கா சோப்ராவின் காதலர்கள் லிஸ்ட்..!

  • IndiaGlitz, [Friday,May 12 2023]

பிரபல நடிகை ஒருவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் தற்போது திருமணத்திற்கு முந்தைய தனது காதல் குறித்து மலரும் நினைவுகளை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நடிகை பிரியங்கா சோப்ரா ‘லவ் அகெய்ன்’ என்ற திரைப்படத்தில் அவர் நடித்துள்ள நிலையில் அந்த படம் இன்று வெளியாகிறது. இந்த நிலையில் ‘லவ் அகெய்ன்’ என்ற டைட்டிலுக்கு ஏற்ப தனது பழைய டேட்டிங் நண்பர்கள் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளார். ஷாஹித் கபூர், ஹனுமான் பவேஜா, ஷாருக்கான் ஆகியோர்களுடன் தான் டேட்டிங்கில் இருந்ததாகவும் தான் டேட்டிங்கில் இருந்த அனைவருமே மிகவும் நல்லவர் என்றும் கூறினார். ஆனால் அதே நேரத்தில் அந்த உறவு தொடர முடியாததற்கு பல்வேறு காரணங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.



குறிப்பாக கடந்த 2013ஆம் ஆண்டு ஷாருக்கான் உடன் அவர் டேட்டிங்கில் இருந்தபோது டொரண்டோவில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலை ஷாருக்கான் மறுத்து இருந்தார் என்பதும் பிரியங்கா சோப்ரா எப்போதுமே தனது தோழி என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்க பாடகர் மற்றும் நடிகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்த பிரியங்கா சோப்ரா, அதன்பின் அவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிகள் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

அரசியலுக்கு வருவது உறுதி: ரஜினி பட வில்லன் நடிகர் அறிவிப்பு..!

திரை உலகை சேர்ந்த பல நடிகர்கள், நடிகைகள் ஏற்கனவே அரசியலில் இருந்து வரும் நிலையில் விஜய் உள்பட இன்னும் பல பிரபலங்கள் அரசியலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில்

மறைந்த பிரபல தமிழ் நடிகரின் மனைவிக்கு 6 மாதம் சிறை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

ஆர்ஜே பாலாஜியின் 'எல்கேஜி' உள்பட ஒரு சில படங்களில் நடித்த பிரபல நடிகர் ரித்தீஷ் மனைவிக்கு ஆறு மாதம் சிறை தண்டனை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அருள்நிதியின் 'கழுவேத்தி மூர்க்கன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு.. வேற லெவல் போஸ்டர்..!

அருள்நிதி நடிப்பில் உருவாகி வந்த  'கழுவேத்தி மூர்க்கன்' என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

திடீரென மாலையும் கழுத்துமாக பிக்பாஸ் ஜூலி.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி திடீரென மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

'கங்குவா' படத்திற்காக வேற லெவலுக்கு மாறிய சூர்யா.. மாஸ் புகைப்படம்..!

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் குறித்த செய்திகள் இணைய தளங்களில் வெளியாகி