இயக்குநர் கேமராவில் உள்ளாடையை காட்டச் சொன்னார்? மோசமான அனுபவத்தை பகிர்ந்த விஜய் பட நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட், தற்போது ஹாலிவுட் என்று உலகப் பிரபலமாக மாறியிருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா தனக்கு நிகழ்ந்த மோசமான அனுபவம் குறித்து பேசியுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்து தங்களது விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் மஜித் இயக்கத்தில் வெளியான ‘தமிழன்’ திரைப்படத்தில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாகி தற்போது ஹாலிவுட்டில் ‘சிட்டாடல்‘, ‘லவ் அகேய்ன்’ என்று தொடர் வெற்றிகளைக் கொடுத்துக் கொண்டிருப்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் தற்போது தனது ஆரம்பகால சினிமா அனுபவம் குறித்த கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், நடிகை பிரியங்காவிற்கு நடந்த ஒரு மோசமான அனுபவம்தான் தற்போது பாலிவுட் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்க வந்த புதிதில் ஒரு திரைப்படத்தில் அண்டர் கவர் ஏஜெண்ட் கதாபாத்திரத்தில் நடித்ததாகவும் அப்போது ஒரு நபரை மயக்க வேண்டும் என்பதற்காக தனது உள்ளாடையை கழட்டுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். அந்தக் காட்சியில் நான் உள்ளாடையை கழட்டியபோது அதை கேமராவில் காண்பிக்க வேண்டும் என்று இயக்குநர் கூறினார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த நான் அந்த செட்டை விட்டே கிளம்பிவிட்டேன். பின்பு இரண்டு நாட்கள் கழித்துதான் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் மனிதாபிமானமற்ற இந்தச் செயல் அப்போது கடும் வருத்தத்தைக் கொடுத்தது என்றும் நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார். அவர் வெளியிட்டள்ள இந்தத் தகவல் தற்போது பாலிவுட் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பாகி இருக்கிறது. அதோடு ரசிகர்களிடையே கடும் விமர்சனத்திற்கு ஆளாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments