கணவருடன் பீச்சில் பிரியங்கா சோப்ரா.. கால் வைக்க வேறு இடமே இல்லையா? குவியும் கமெண்ட்ஸ்..!

  • IndiaGlitz, [Saturday,September 14 2024]

நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் பிரான்ஸ் நாட்டில் உள்ள பீச்சில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்தில் ஒன்றில் பிரியங்காவின் நெஞ்சில் அவரது கணவர் கால் வைத்திருக்கும் புகைப்படத்திற்கு கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

கடந்த 2000 ஆண்டு உலக அழகி பட்டம் பெற்ற பிரியங்கா சோப்ரா விஜய் நடித்த ’தமிழன்’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்த ஒரு படம் மட்டுமே அவர் தமிழில் நடித்த நிலையில் அதன் பிறகு அவர் இந்தி படங்களில் பிரபலமானார் என்பதும் சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் பிரியங்கா சோப்ராவுக்கு 98 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். அவர் பதிவு செய்யும் ஒவ்வொரு புகைப்படமும் வீடியோவும் மிகப்பெரிய அளவில் வைரலாகும்.

இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டிற்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள பிரியங்கா சோப்ரா அங்குள்ள பீச்சில் பிகினி உடையில் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இதில் ஒன்றில் பிரியங்கா சோப்ராவின் நெஞ்சில் அவரது கணவர் கால் இருக்கும் நிலையில் கால் வைக்க வேறு இடமே கிடைக்கவில்லையா என்பது போன்ற கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன.