இந்தியாவிற்காக அமெரிக்காவில் நிதி திரட்டிய விஜய்பட நாயகி… நன்றி தெரிவித்து உருக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “தமிழன்”. இத்திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. உலகஅழகியான இவர் பின்பு ஹாலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது ஹாலிவுட்டிலும் கலக்கி வருகிறார்.
அவர் கொரோனா நேரத்தில் அவதியுற்று வரும் இந்திய மக்களுக்கு உதவும் வகையில் 1.3 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை திரட்டி உள்ளார். இந்தப் பணத்தை அளித்த கொடையாளர்களுக்கு தற்போது உருக்கத்தோடு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நடிகை பிரியங்கா சோப்ரா கொரோனாவின் இரண்டாம் அலையால் கடும் அவதியுற்று வந்த இந்திய மக்களுக்கு உதவும் வகையில் தனது கணவர் நிக் ஜோனாசுடன் இணைந்து “டுகெதர் ஃபார் இந்தியா” என்ற பெயரில் நிதி திரட்டி வந்தார். தற்போது இதன் மூலம் 1.3 மில்லியன் டாலர்கள் திரட்டப்பட்டு உள்ளதாகவும் இந்த நிதியை வைத்துக் கொணடு உத்திரப்பிரதேசம், இமாச்சல் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கப்பட்டு உள்ளது என்றும் மேலும் தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள், செறிவூட்டிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.
மேலும் கொரோனா நேரத்தில் பசி மற்றும் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்து உள்ளது. அதை எதிர்த்துப் போராட வேண்டும் என தெரிவித்த நடிகை பிரியங்கா சோப்ரா இதுவரை 1.3 மில்லியன் டாலர் தொகை நன்கொடையாக கிடைத்து இருக்கிறது. இதற்கு பங்களிப்பு செய்த அனைவருக்கும் பெரிய நன்றிகள் எனத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
கொரோனா நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள் மற்றும் பெண்களின் வாழ்வாதாரங்களை மீண்டும் கட்டமைக்க இந்த நிதி பயன்படுத்தபப்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இதேபோன்று நன்கொடைகளைத் திரட்டி மக்களுக்கு உதவி வரும் பில்&மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கும் நடிகை பிரியங்கா தனது நன்றியை தெரிவித்து கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments