ரூ.200 கோடியா? பிரமிக்க வைக்கும் நடிகை பிரியங்கா சோப்ராவின் நெக்லஸ் பற்றிய தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது சர்வதேச அளவில் பிரபலமாக அறியப்படுகிற நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த ஒரு நெக்லஸ் குறித்த தகவல்தான் தற்போது சமூகவலைத் தளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டின் மெட் காலா பேஷன் நிகழ்ச்சி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கோலாகலமாக நடந்துமுடிந்தது. இந்த நிகழ்ச்சியானது மறைந்த பேஷன் கலைஞர் கார்ல் லாகர் பெக்கடினுக்கு மரியாதை செலுத்துவதையே கருப்பொருளாகக் கொண்டிருந்தது. இதனால் உலகப் பிரபலங்கள் பலரும் வெள்ளை மணிகள் அடங்கிய உடைகள் மற்றும் கருப்பு, வெள்ளை நிறத்திலான உடைகளை அணிந்து வந்திருந்தனர். ஆனாலும் சில முக்கியப் பிரபலங்கள் விலையுயர்ந்த நகைகளை அணிந்துவந்து பலரையும் ஆச்சர்யப்படுத்தி இருந்தனர்.
அந்த வகையில் பாப் பாடகர் நிக் ஜோனாஸை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவிலேயே செட்டிலாகிவிட்ட நடிகை பிரியங்கா சோப்ரா ஒரு ப்ளூ நிறத்திலான வைர நெக்லஸை அணிந்திருந்தார். அது பார்ப்பதற்கு டைட்டானிக் படத்தில் வந்த ப்ளூ நெக்லஸ் போலவே இருந்ததால் ரசிகர்கள் பலரும் ஆச்சர்யத்துடன் அதுகுறித்த தகவலை தேடிவந்தனர்.
இந்நிலையில் அது 1970 ஆம் ஆண்டு சேகரிக்கப்பட்ட ஒரு விண்டேஜ் பல்கேரியன் லகுனா ப்ளூ நெக்லஸ் என்பது தற்போது தெரியவந்துள்ளது. 11.16 கேரட் அளவிலான இந்த நெக்லஸ் பல்கேரியாவின் முக்கிய நரமான ரோமுக்கு மரியாதை செலுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது என்றும் அந்தக் காலத்து ரோமானிய பேரரசர்கள் அணிந்திருந்த பேலாரல் வடிவமைப்பு (இலை போன்ற வடிவமைப்பில்) உருவாக்கப்பட்டது என்றும் தற்போது தகவல் கூறப்படுகிறது.
மேலும் இந்த நெக்லஸின் விலை 25 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா மெட் காலாவில் அணிந்து பலரையும் ஆச்சர்யப்படுத்திய இந்த விண்டேஜ் ப்ளூ வைர நெக்லஸ் மே மாததிற்கு பிறகு Sotheby’s luxury இல் விற்பனைக்கு வரவிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments