close
Choose your channels

ஹாலிவுட் படத்தில் வில்லியாக நடிக்கும் விஜய் நாயகி

Wednesday, February 17, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாலிவுட் நாயகி தீபிகா படுகோனே ஹாலிவுட் படம் ஒன்றில் வின் டீசலுடன் இணைந்து நடித்து வருகிறார் என்ற செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் மேலும் ஒரு பாலிவுட் நாயகியும் ஹாலிவுட்டுக்கு செல்கிறார். இளையதளபதி விஜய் நடித்த 'தமிழன்' படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பெற்ற ப்ரியங்கா சோப்ராதான் ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார்.

பிரபல Wrestling வீரர் ராக் நடிக்கும் 'Baywatch' படத்தில் பிரியங்கா சோப்ரா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தியினை பிரியங்கா சோப்ரா தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பிரியங்கா சோப்ரா வில்லி கேரக்டரில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் Zac Efron அவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா ஆகியோர் அடுத்தடுத்து ஹாலிவுட் படங்களில் நடிப்பதால் பாலிவுட் ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment