ப்ரியங்கா சோப்ராவின் ஹாட் புகைப்படங்கள்: ஸ்னாக்ஸ் சாப்பிடும் கணவர்!

  • IndiaGlitz, [Monday,August 30 2021]

பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா தனது ஹாட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அதே புகைப்படத்தில் அவரது கணவர் ஸ்னாக் சாப்பிடுவது போன்று உள்ளதை நெட்டிசன்கள் வைரலாகி வருகின்றனர்.

தளபதி விஜய் நடித்த ’தமிழன்’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் உலக அழகி பிரியங்கா சோப்ரா. அதன்பின்னர் அவர் தமிழ் படங்களில் நடிக்காவிட்டாலும் பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்து நம்பர் ஒன் நடிகை ஆனார் என்பதும் தற்போது அவர் ஹாலிவுட்டிலும் வெளிநாட்டு வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவருடன் இணைந்து பல ஹாட்டஸ்ட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவு செய்துள்ள நிலையில் நேற்றும் இன்றும் அவர் பதிவு செய்துள்ள புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றன.

நீச்சலுடையில் மணல் பரப்பில் படுத்திருக்கும் பிரியங்கா சோப்ராவின் புகைப்படம் மற்றும் அவரது கணவர் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது போன்ற புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் தங்கள் பாணியில் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பதும் இந்த இரண்டு புகைப்படங்களுக்கும் லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.