உன்னை கொண்டாடுகிறேன் அன்பே… பிரபல நடிகையின் பிறந்தநாளில் கணவர் உருக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்து தற்போது ஹாலிவுட் சினிமாவில் மாஸ் காட்டிவரும் நடிகை பிரியங்கா சோப்ரா தனது 41 ஆவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இந்நிலையில் அவருடைய கணவர் வாழ்த்து தெரிவித்த இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
2000 இல் உலக அழகிபட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா தொடர்ந்து 2002 இல் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ‘தமிழன்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதையடுத்து 2003 இல் பாலிவுட் சினிமாவில் அறிமுகமான அவர், தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளுள் ஒருவராக மாறினார். அதேபோல ஹாலிவுட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்த அவர் 2015 இல் வெளியான ‘குவாண்டிகோ’ வெப் சீரிஸ் மூலம் உலக அளவில் பிரபலமானார்.
மேலும் இவர் நடித்துள்ள ‘சிட்டாடல்’ வெப் சீரிஸின் முதல் பாகம் கடந்த ஏப்ரலில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. இதையடுத்து ஹாலிவுட் சினிமாவில் தனக்கான இடத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ள நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது ஜான்சினா மற்றும் இட்ரிஸ்எக்டாவுடன் இணைந்து ‘ஹெட்ஸ் ஆஃப் ஸ்டேட்ஸ்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பாப் பாடகர் நிக் ஜோனாஸை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டு வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டது ரசிகர்கள் அறிந்ததுதான். இதனால் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்ற அவர் தனது மகளுக்கு மால்டி மேரி ஜோன்ஸ் சோப்ரா என பெயர் வைத்து அவருடன் நேரத்தை செலவழித்து வருகிறார்.
நடிகை பிரியங்கா சோப்ரா சினிமாவைத் தவிர பல்வேறு தொழில் முதலீடுகளையும் பல பிராண்ட் நிறுவனங்களுக்கு அம்பாசிட்டராகவும் செயல்பட்டு வருகிறார். மேலும் பெண் முன்னேற்றம், சமூக மேம்பாடு குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். இப்படி பல முனைகளில் தனது கவனத்தை செலுத்திவரும் நடிகை தற்போது 41 ஆவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
இதையடுத்து பிரியங்காவின் கணவரும் பாடகருமான நிக் ஜோனாஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் ‘உன்னை கொண்டாடுவதை நான் விரும்புகிறேன். பிறந்த நாள் வாழ்த்துகள் என் அன்பே’ என பதிவிட்டு இருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் சினிமாவில் நடைபெற்று வரும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஹாலிவுட்டில் ஏஐ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி திரைக்கதை எழுதுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹாலிவுட் எழுத்தாளர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இந்தப் போராட்டத்திற்கு 1 லட்சத்து 60 ஆயிரம் நடிகர்கள் அடங்கிய அமைப்பும் ஆதரவு அளித்து வருகிறது. அந்த வகையில் நடிகை பிரியங்கா சோப்ராவும் சமீபத்தில் நான் திரைக்கதை எழுத்தாளர்களுக்கு ஆதரவாக நிற்கிறேன் என தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை பிரியங்காவின் பிறந்த நாளை ஒட்டி பாலிவுட்டில் நடிகை சோனம் கபூர், கத்ரினா கைஃப், கியாரா அத்வானி, அர்ஜுன் கபூர் ஆகியோர் சமூகவலைத் தளங்களில் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். மேலும் ரசிகர்கள், பிரபலங்கள் என்று பலரும் நடிகை பிரியங்காவிற்கு வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments