close
Choose your channels

அம்பானி மகன் நிச்சயதார்த்ததில் காதலருடன் கலந்து கொண்ட பிரபல நடிகை

Friday, June 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், அவரது நீண்ட நாள் தோழியான ஷிலேகா மேத்தாவுக்கும் நேற்று மும்பையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பல பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் , விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு பிரபல பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா தனது காதலர் நிக் ஜோனஸ் அவர்களுடன் கலந்து கொண்டார். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படும் நிலையில் ப்ரியங்கா இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு காதலருடன் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நிக் ஜோனஸ் ஒரு பிரபல பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது

ஆகாஷ்-ஷ்லெகா நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் ஷாருக்கான் தனது மனைவி கவுரிகானுடன் கலந்து கொண்டார். அதேபொல் ஆலியா பட்,ரன்பீர் கபூ, கரண் ஜோஹர், வினோத் சோப்ரா, அனுபமா சோப்ரா உள்பட பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் சச்சின் தெண்டுல்கர் தனது மனைவி அஞ்சலியுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment