படப்பிடிப்பில் ப்ரியங்கா சோப்ரா காயம். மருத்துவமனையில் அனுமதி

  • IndiaGlitz, [Saturday,January 14 2017]

இளையதளபதி விஜய் நடித்த 'தமிழன்' படம் உள்பட ஏராளமான திரைப்படங்களில் நடித்து பாலிவுட்டின் முன்னணி நாயகியான பிரியங்கா சோப்ரா நேற்று தொலைக்காட்சி தொடரான Quantico என்ற தொடரில் நடித்து கொண்டிருந்தபோது எதிர்பாராமல் கீழே விழுந்தார். இதனால் அவருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது.

உடனடியாக பிரியங்கா சோப்ரா அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாகவும், அவர் இன்னும் ஒருசில நாட்கள் பூரண ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

பிரியங்கா சோப்ரா அனேகமாக அடுத்த வாரம் முதல் வழக்கமான படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.