நடிகை த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்ட பிக்பாஸ் பிரியங்கா: ஏன் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியின் தொகுப்பாளினியும், பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான பிரியங்கா நடிகை த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் பிரியங்கா என்பதும் இவர் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாமிடம் பிடித்தார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் பிரியங்கா, விஜய் சேதுபதி, த்ரிஷாநடித்த ’96’ படத்தில் த்ரிஷாவின் ஜானு கேரக்டர் போலவே உடை அணிந்து தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவு செய்திருந்தார்.
இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வரும் நிலையில் நடிகை த்ரிஷா இந்த புகைப்படத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதனையடுத்து பிரியங்கா ‘மன்னிச்சுருங்க’ என்று பதிவு செய்ததற்கு த்ரிஷா, ‘ரொம்ப க்யூட்டாக இருக்கு பிரியங்கா’ என்று பதிலளித்துள்ளார்.
JAANUU???? pic.twitter.com/gQ4SezBnc0
— Priyanka Deshpande (@Priyanka2804) February 19, 2022
Manichurungaaa????????
— Priyanka Deshpande (@Priyanka2804) February 19, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments