கண்ணாடிக்குள் அழகு தேவதை… பிரியங்கா அருள்மோகனின் வித்தியாசமான போட்டோஷுட்!

  • IndiaGlitz, [Monday,May 08 2023]

தமிழ் சினிமா ரசிகர்களிடையே க்யூட்டான சிரிப்பின் மூலம் பிரபலமான நடிகை பிரியங்கா அருள்மோகன் புதிய போட்டோஷுட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். வித்தியாசமாக அமைந்துள்ள இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களையும் கமெண்ட்டுகளையும் குவித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவிலும் வலம்வருபவர் நடிகை பிரியங்கா அருள்மோகன். நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘டாக்டர்’, ‘டான்’ என்று இரு படங்களிலும் க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தி இளம் ரசிகர்களிடம் வரபேற்பை பெற்றார். தொடர்ந்து நடிகர் சூர்யாவுடன் இணைந்து ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தில் கிராமத்து பெண் வேடத்திலும் பட்டையைக் கிளப்பியிருந்தார்.

தமிழில் தற்போது நடிகர் ஜெயம்ரவி மற்றும் தனுஷுடனும் தெலுங்கில் நானி போன்ற நடிகர்களுடன் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் தற்போது நடிகை பிரியங்கா அருள்மோகன் கண்ணாடிக்குள் தன்னைப் பார்ப்பது போன்று வித்தியமாசமாக போட்டோஷுட் எடுத்துள்ளார். அதிலும் பரந்த வயல்வெளி போன்றிருக்கும் இடத்தில் இந்தப் புகைப்படங்களை எடுத்திருப்பதால் பார்ப்பதற்கு இயற்கை அழகு சொட்டுவதைப் போன்றே இருக்கிறது.

வெள்ளை நிறத்தில் உடையணிந்து நடிகை பிரியங்கா அருள்மோகன் எடுத்துக்கொண்ட புதிய போட்டோஷுட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

More News

மேக்கப் இல்லாமல் 'கங்குவா' நாயகியின் போட்டோஷூட்.. குவியும் லைக்ஸ்..!

 சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தில் நாயகியாக நடித்து வரும் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேக்கப் இல்லாமல்

நடிகை அனுஷ்கா ஷெட்டியின் அடுத்த படத்தில் இணைகிறாரா தனுஷ்..? என்ன செய்யப் போகிறார் தெரியுமா?

நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகை அனுஷ்கா ஷெட்டி நடித்து வரும் திரைப்படம் 'மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் 'பொலிஷெட்டி'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற ஏழை மாணவர்களின் மேல் படிப்புக்கு உதவி: விஷால் அறிவிப்பு..!

பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில் அதில் தேர்வு எழுதிய 94 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி

உலக அளவில் 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் வசூல் இத்தனை கோடியா? அதிகாரபூர்வ அறிவிப்பு.!

மணிரத்னம் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும்

மகனுக்கு சாதியில்லா சான்றிதழ் பெற்ற தமிழ் நடிகை... பாராட்டும் ரசிகர்கள்!

சமீபத்தில் திரைப்பட புரமோஷன் விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகை கயல் ஆனந்தி தனது மகனுக்கு சாதியில்லா சான்றிதழ்