நியூசிலாந்தின் அமைச்சராகப் பொறுப்பு ஏற்று இருக்கும் முதல் இந்தியப் பெண்மணி!!!
- IndiaGlitz, [Monday,November 02 2020]
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பெண்மணி ஒருவர் நியூசிலாந்து நாட்டின் அமைச்சாராக பொறுப்பு ஏற்றிருக்கிறார். இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒருவர் முதல் முறையாக நியூசிலாந்து அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்தின் அதிபர் ஜெசிந்தா ஆர்டெர்சன் இன்று தனது புதிய அமைச்சரவையை அறிமுகப் படுத்தினார். அந்த அமைச்சரவையில் 41 வயதான பிரியங்கா ராதாகிருஷ்ணன் என்பவரும் இடம் பெற்றிருக்கிறார்.
பிரியங்காவின் அப்பா ராதாகிருஷ்ணன் கேரளாவின் கொச்சி பராவூர் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவருடைய தாத்தா ஒரு மருத்துவ நிபுணராகவும் கம்யூனிஸ்ட் ஆதரவாளராகவும் அப்பகுதியில் செயல்பட்டு இருக்கிறார். இந்நிலையில் பிரியங்கா பிறந்து வளர்ந்தது எல்லாம் சிங்கப்பூரில். அதோடு ஆக்லாந்தில் வசித்து வந்தபோது அங்கு 2 முறை எம்.பி பதவியும் வகித்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் மேற்படிப்பை தொடர நியூசிலாந்து சென்றபோது அங்கு ரிச்சர்ட்சன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். நியூசிலாந்திலேயே செட்டில் ஆன இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்ததாகவும் அதைத் தொடர்ந்து தற்போது நியூசிலாந்து அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையின் போது நியூசிலாந்து பிரதமர் ஆர்டணருடன் இணைந்து கேரள மக்களுக்கு வீடியோ காலில் தனது வாழ்த்துகளைக் கூறிக்கொண்டார். அது முதற்கொண்டு பிரியங்கா இந்தியாவில் புகழ் பெற்ற பெண்மணியாக உருவெடுத்தார். தற்போது நியூசிலாந்து அமைச்சரவையில் இவருக்கு சமூக மற்றும் தன்னார்வத் துறை அமைச்சராக பதவி கொடுக்கப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.