இயக்குனராக மாறும் தேசிய விருது பெற்ற நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
பாரதிராஜாவின் 'கண்களால் கைது செய்' மற்றும் பாலுமகேந்திராவின் 'அது ஒரு கனாக்காலம்' ஆகிய படங்களில் ஆரம்பத்தில் நடித்த நடிகை ப்ரியாமணி, பின்னர் அமீரின் 'பருத்திவீரன்' படத்தில் அபாரமாக நடித்ததன் மூலம் தேசியவிருது பெற்றார்.
மேலும் விஷாலுடன் மலைக்கோட்டை, இரண்டு வித்தியாசமான வேடங்களில் சாருலதா, மணிரத்னம் இயக்கிய ராவணன் உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்த ப்ரியாமணி தற்போது இயக்குனராக மாறவுள்ளாராம்.
சுதீப் நடிக்கவுள்ள ஒரு படத்தை ப்ரியாமணி தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஸ்ரீப்ரியா, ரேவதி, சுஹாசினி, லட்சுமிராமகிருஷ்ணன், ஆகிய நடிகைகள் இயக்குனர்களாக வெற்றி பெற்றுள்ள நிலையில் அந்த வரிசையில் இணையும் ப்ரியாமணியும் வெற்றி பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments