லிப்-லாக், உடலுறவு காட்சிகளில் நடிப்பது? தேசிய விருது பெற்ற முக்கிய நடிகை கருத்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் கிட்டத்தட்ட 20 வருடங்களாக நடித்துவரும் நடிகை ஒருவர் லிப்-லாக் மற்றும் படுக்கை அறை காட்சிகளில் நடிக்கவே மாட்டேன். அதுபோன்ற காட்சிகளில் நடிப்பதற்கு சங்கடமாக இருக்கிறது, மேலும் அது என்னுடைய தனிப்பட்ட விருப்பம் என்று கருத்துத் தெரிவித்து இருக்கிறார். இந்தத் தகவல் தற்போது ரசிகர்களிடையே வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.
தெலுங்கு சினிமாவில் 2003 இல் வெளியான ‘எவரே சுட்டகாடு’ திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. இவர் தமிழ் சினிமாவில் இயக்குநர் அமீர் சுல்தான் இயக்கிய ‘பருத்திவீரன்’ திரைப்படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி அதற்காக தேசிய விருதையும் தட்டிச்சென்றார்.
இதனால் தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் குவிந்த நிலையில் ‘அது ஒரு கனா காலம்‘, ‘மலைக்கோட்டை‘, ‘தோட்டா‘ இயக்குநர் மணிரத்தினத்தின் ‘ராவணன்’, தனித்துவம் மிக்க கேரக்டரான ‘சாருலதா‘ போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.
மேலும் தெலுங்கு, இந்தி சினிமாவிலும் நடித்துவந்த இவர் சமீபத்தில் ‘கஸ்டடி’ திரைப்படத்தில் படு போல்டான கதபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். மேலும் இந்தியில் ஷாருக்கான் நடித்துவரும் ‘ஜவான்‘ மற்றும் அஜய் தேவ்கன் நடித்துவரும் ‘மைதான்‘ போன்ற திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சினிமாவில் லிப்-லாக் மற்றும் நெருக்கமான படுக்கை அறை காட்சிகளில் நடிப்பது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், நான் திரையில் முத்தமிட மாட்டேன். இது ஒரு பாத்திரம் மற்றும் இது எனது வேலை என்று எனக்குத் தெரியும். ஆனால் தனிப்பட்ட குறிப்பில் நான் மற்றொரு மனிதனை திரையில் முத்தமிட்டால் நான் அவ்வளவு இயல்பாக உணரமாட்டேன். ஏனென்றால் நான் என் கணவருக்கு பதிலளிக்க வேண்டும்.
இதற்கு முன்பு நடிகர் சத்யதீப் மிஸ்ராவுடன் அப்படியொரு காட்சியில் நடிக்க வேண்டி இருந்தது. ஆனால் நான் ஒப்புக்கொள்ளவில்லை. கன்னத்தில் முத்தமிடுவதைத் தவிர எனக்கு எதுவும் வசதியாக இல்லை. இதுபோன்ற காட்சிகளைக் கொண்ட பல திட்டங்கள் எனக்கு கிடைத்தும் மறுத்துவிட்டேன்.
எனது குடும்பத்தின் இரு தரப்பினர்களும் எனது படம் வெளிவரும்போது அதைப் பார்ப்பார்கள் என்று தெரியும், நடிப்பு என் வேலை என்று அவர்களுக்கும் தெரியும். ஆனால் அவர்கள் பயப்படுவதை நான் விரும்பவில்லை. இது எனது தனிப்பட்ட விருப்பம் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
பருத்தி வீரன் திரைப்படத்திற்காக தேசிய விருதினைப் பெற்று பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நடிகை பிரியாமணி முஸ்தபா ராஜ் என்பவரை கடந்த 2017 இல் திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் லிப்- லாக் காட்சிகளில் நடிப்பது சங்கடமாக இருக்கும், என் கணவருக்கு பதில் சொல்ல வேண்டும் என்று நடிகை பிரியாமணி தெரிவித்து இருக்கும் கருத்துகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments