இதற்கு கூட பணம் கொடுக்க வேண்டுமா? விஷயம் தெரிந்து ஆச்சரியம் அடைந்தேன்: நடிகை பிரியாமணி

  • IndiaGlitz, [Thursday,February 22 2024]

இதற்கு கூட பணம் கொடுக்க வேண்டுமா என்று விஷயம் தெரிந்து நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன் என்று பிரபல நடிகை ப்ரியாமணி தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகர், நடிகைகள் மற்றும் திரை உலக பிரபலங்கள் வெளியே செல்லும்போது அவர்களை சுற்றி ஒரு கூட்டம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதை பார்த்து வருகிறோம். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகும் என்பதும் அதனால் அந்த குறிப்பிட்ட நடிகர் நடிகைகளுக்கு நல்ல விளம்பரம் கிடைக்கும் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் நடிகர் நடிகைகளை குறிவைத்து புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுப்பவர்களை Paparazziகள் என்று கூறுவார்கள். இந்நிலையில் இது குறித்த ஒரு தகவலை பேட்டி ஒன்றில் நடிகை பிரியாமணி கூறியுள்ளார். அதில் ’பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் ஏர்போர்ட், ஜிம், வாக்கிங் என எங்கு சென்றாலும் அவர்களை வளைத்து வளைத்து புகைப்படக்காரர்கள் புகைப்படம் எடுக்கிறார்கள்.

என்னை ஏன் யாரும் புகைப்படம் எடுப்பதில்லை என்று நண்பர் ஒருவரிடம் கேட்டபோது அதற்கு Paparazziகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கூறினார். அப்போதுதான் இது போன்ற விஷயங்களுக்கு நாம் எங்கு செல்கிறோம் என்ற தகவலையும், அவர்கள் கேட்கும் தொகையையும் கொடுக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன். அது தவறு என நான் கூறவில்லை, ஆனால் விஷயம் தெரிந்த போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்று கூறியுள்ளார்

இதனை அடுத்து Paparazziகள் நடிகர் நடிகைகளை விரட்டி விரட்டி புகைப்படம் எடுப்பது முன்கூட்டியே பணம் கொடுத்து செய்யப்படும் செட்டப் என்று தற்போது தெரியவந்துள்ளது.

More News

234ஐ 100ஆக மாற்றிய விஜய்.. உறுப்பினர்களை சேர்க்க செயலி.. வேற லெவலில் தவெக..!

தளபதி விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் இந்த கட்சியின் முதல் கூட்டம் பனையூரில் உள்ள அலுவலகத்தில் நடந்ததாகவும் அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும்

நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்: ஏ.வி.ராஜூவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய த்ரிஷா

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முன்னாள் அதிமுக பிரமுகர் ஏ.வி ராஜூவுக்கு த்ரிஷா தரப்பில் இருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: திமுக அரசுக்கு எதிரான மனு விசாரணை!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. 

தனுஷுக்கு செம்ம டஃப் கொடுப்பார் போல தெரியுதே.. மாறி மாறி நன்றி சொன்ன எஸ்.ஜே.சூர்யா..!

தனுஷ் நடித்து இயக்கும்  50-வது திரைப்படமான 'ராயன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த எஸ்ஜே சூர்யாவின் போஸ்டர் நேற்று வெளியாகி இணையத்தில்

வேற லெவலில் சமந்தாவின் உடல்நிலை.. ரித்திகா சிங்கிற்கு போட்டியா?

நடிகை சமந்தா வேற லெவலில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.