பிரியாமணி கிரிமினல்...அந்த கல்யாணம் செல்லாது....! கணவரின் முதல் மனைவி குற்றச்சாட்டு.....!

  • IndiaGlitz, [Thursday,July 22 2021]

முஸ்தபா ராஜ், நடிகை பிரியாமணியின் கல்யாணம் செல்லாது, அது சட்டவிரோதமானது என அவரின் முதல் மனைவி புகார் கொடுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து, மிகவும் பிரபலமானவர் தான் நடிகை பிரியாமணி. தமிழில் கண்களால் கைது என்ற படத்தில் தான், இயக்குனர் பாரதிராஜா பிரியமாணியை அறிமுகம் செய்து வைத்தார். பாலுமகேந்திராவின், அது ஒரு கனாகாலம், அமீர்-ன் பருத்திவீரன் போன்ற படங்களில் நடித்து விருதுகளையும், தேசிய விருதையும் தட்டிச் சென்றார்.

கடந்த 2017 - ஆம்ஆண்டு இவருக்கு முஸ்தபா ராஜ் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், முஸ்தபா-விற்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். முதல் மனைவியை 2013- ஆம் ஆண்டு இவர் பிரிந்தார்.

ஆனால் இவர்களின் திருமணம் செல்லாது என்றும், இது சட்டவிரோதமானது என்றும், எங்களுக்குள் முறையாக விவகாரத்து பெறவில்லை என்றும் முதல்மனைவி ஆயிஷா புகார் கொடுத்துள்ளார். பிரியாமணி, முஸ்தபா ராஜ் மீது குடும்ப வன்முறை புகாரும், கிரிமினல் புகாரும் தரப்பட்டுள்ளது. நாங்கள் விவாகரத்திற்கு கூட தாக்கல் செய்யவில்லை, ஆனால் பிரியாமணியை திருமணம் செய்யும் போது, திருமணமாகவில்லை என குறிப்பிட்டுள்ளார் என ஆயிஷா கூறியுள்ளார்.

இதுகுறித்து முஸ்தபா ராஜ் கூறியிருப்பதாவது,
ஆயிஷா எனக்கு எதிராக வைத்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை. என்னுடைய குழந்தைகளுக்கு தேவையானவற்றை நான் தவறாமல் செய்து வருகிறேன். என்னிடம் இருந்து பணம் பறிப்பதற்காக, இது போன்ற செயல்களில் ஆயிஷா ஈடுபட்டுள்ளார். கடந்த 2010-இல் இருந்து நாங்கள் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், சென்ற 2013-இல் விவாகரத்து பெற்றோம். இத்தனை வருடங்கள் அமைதியாக இருந்த ஆயிஷா, திடீரென இப்படி நடந்து கொள்வது ஏன் என்று தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.
 

More News

Tamannaah's turns a Disney princess in her new Video!

Milky beauty Tammy is a sought after heroine in the Southern film industry and has a huge fans base all over India

Famous Premier League football player arrested for alleged child sexual abuse

A Premier League football player has been arrested by the police on suspicion of child sexual abuse offences

Pornography laws need clear-cut definitions: Experts

The arrest of Raj Kundra, the Mumbai-based businessman and husband of Bollywood actress Shilpa Shetty,

Director Anurag Kashyap's daughter opens up about MeToo allegations against him

Bollywood director Anurag Kashyap's daughter Aaliyah Kashyap has opened up about the sexual harassment allegations levelled against her father as part of the MeToo movement

Anushka Shetty gets nostalgic as 'Super' turns a year older

It was on 20 July 2005 that Anushka Shetty debuted in 'Super', which was headlined by Akkineni Nagarjuna.