4 மொழிகளில் பிரியாமணியின் அடுத்த படம்.. விஜய்சேதுபதி செய்த உதவி!
Send us your feedback to audioarticles@vaarta.com
தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி முக்கிய வேடத்தில் நடிக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உதவி செய்துள்ளார்.
கார்த்தி நடிப்பில் அமீர் இயக்கத்தில் உருவான ’பருத்திவீரன்’ என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றவர் நடிகை பிரியாமணி, இவர் தற்போது அஜய் தேவ்கான் நடித்து வரும் ’மைதான்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அதேபோல் வெங்கட்பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா- கீர்த்தி ஷெட்டி நடித்து வரும் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பிரியாமணி கதையின் நாயகியாக நடித்து வரும் திரைப்படம் ’DR 56’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அட்டகாசமாக உள்ள இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை ராஜேஷ் ஆனந்த் லீலா என்பவர் இயக்கி வருகிறார். நோபின்பால் இசையில் ராகேஷ்சி திலக் ஒளிப்பதிவில் விஷ்வா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.
Happy to share the first look of #DR56
— VijaySethupathi (@VijaySethuOffl) October 17, 2022
Starring #Priyamani. Congrats team.@PRtheHero @kashyapmedias @rakesh_thilak @ShankarRamanS1 @itsvijayeshwar @nobinpaul #HariHaraPictures@sLj_creations #ANBalaji@ProBhuvan pic.twitter.com/G7F4w53Rx4
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments