காஜல் அகர்வாலை பின்பற்றும் ப்ரியாமணி
Send us your feedback to audioarticles@vaarta.com
கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நடித்து வரும் 'சக்கரவியூகா' என்ற படத்தில் பிரபல நடிகை காஜல் அகர்வால் ஒரு பாடலை பாடி பாடகியாக அறிமுகமாகியுள்ளார் என்பதை சமீபத்தில் பார்த்தோம். இந்நிலையில் காஜல் அகர்வாலை தொடர்ந்து தேசிய விருது பெற்ற பிரபல நடிகை ப்ரியாமணியும் அதே கன்னட மொழியில் பாடகியாக அவதாரம் எடுத்துள்ளார்.
கன்னடத்தில் தற்போது உருவாகி வரும் 'Devravne Budu Guru' என்ற படத்தில் ப்ரியாமணி ஒரு பாடலை பாடியுள்ளதாகவும், அவருடைய பாடலை கேட்ட இந்த படத்தின் நாயகன் அகுல் பாலாஜி ஆச்சரியம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
அகுல்பாலாஜி, இஷா ரங்கநாத் நடித்து வரும் இந்த படத்தை பிரதாம் என்பவர் இயக்கி வருகிறார். ப்ரியாமணியின் பாடல் இந்த படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் பிரபல நடிகை ஸ்வேதா பாசு பத்திரிகையாளராக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com