எந்த நிலையிலும் சமரசம் செய்ய இயலாது: ஜெயலலிதா படம் குறித்து பிரியதர்ஷினி
- IndiaGlitz, [Sunday,November 03 2019]
முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்குனர் பிரியதர்ஷினி ‘தி அயர்ன் லேடி’ என்ற பெயரிலும், இயக்குனர் கவுதம்மேனன் ‘தலைவி’ என்ற பெயரிலும் உருவாக்கி வருகின்றனர். மேலும் ஒருசில இயக்குனர்கள் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை இயக்கவிருப்பதாக கூறி வருகின்றனர். இந்த நிலையில் இயக்குனர் பிரியதர்ஷினி தான் இயக்கி வரும் ‘தி அயர்ன் லேடி’ படம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தி அயர்ன் லேடி படத்தின் இயக்குனராக உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். இங்கே விவாதிக்கப்பட்ட சில உண்மைகளை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம் என்றாலும், சமீபத்தில் என்னிடம் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் விரிவாக பதிலளிக்க அவற்றை மீண்டும் உங்கள் முன் வைக்கிறேன். தி அயர்ன் லேடி திரைப்படம் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அம்மா செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் முழு வாழ்க்கைக் கதையையும் உள்ளடக்கியது. உண்மை கதாபாத்திரம் கோரும் வெவ்வேறு அம்சங்களை கவனமாக பட்டியலிட்ட பிறகு நித்யா மேனன் அவர்களை அம்மாவின் பாத்திரத்திற்கான சரியான நடிகர் ஆக தேர்வு செய்தேன். அம்மா அவர்களை போல முக அமைப்பு முதல் நிகர் இல்லா ஆளுமை திறன் வரை நித்யா மேனன் இயற்கையாகவே அம்மா அவர்களின் பண்புகளையும் உள்ளடக்கியிருக்கிறார். நமது அம்மா புரட்சி தலைவி அவர்களை போலவே தமிழ் உள்ளடக்கி ஆறு மொழிகளை சரளமாக பேசக்கூடியவர், சிறு வயது முதலே “பரதநாட்டியம்: மற்றும் ஆடல் கலை அறிந்தவர் மற்றும் இசையிலும் நேர்த்தியான திறன் கொண்டவர்
ஒரு வாழ்க்கை வரலாற்றின் மிகவும் சவாலான அம்சம் அதை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதாகும். வாழ்கை வரலாற்று படங்கள் பொதுவாக அதிக சிக்கல்கள், சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்கள் இருந்தாலும் அதன் நிஜ. தன்மையில் இருந்து மாறாமல் மக்களுக்கு அறிமுகப்படுத்த முயன்றுகொண்டு இருக்கிறேன். இந்த களத்தில் ஒரு இயக்குனருக்கு முன் முன்வைக்கப்படும் சவால்கள் அதிகம். மக்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ள கூடிய, ரசிக்க கூடிய வகையில் ஒரு. தரமான படைப்பை கொடுக்க கடமைபட்டு இருக்கிறேன். ரிச்சர்ட் ஆட்டன்பரோ அவர்கள் “காந்தி” வாழ்க்கை வரலாற்றை வடிவமைக்க 18 ஆண்டுகள் செலவிட்டார். ஒரு சிறந்த வாழ்க்கை வரலாற்று படம் மிக சிறந்த படைப்பாக அமைய அதற்கான சரியான கால அவகாசம் தேவைப்படுகிறது இதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
இந்த களத்தில் 50 சதவீத வெற்றி சரியான கதாபாத்திரத்தை தேர்வு செய்வதில் இருக்கிறது. இதில் எந்த நிலையிலும் சமரசம் செய்ய இயலாது. அப்படி செய்தால் நீங்கள் கண்டிப்பாக ஏற்று கொள்ள மாட்டீர்கள் என்பதை அறிந்து இருக்கிறோம் மேலும் உண்மை நிலையில் இருந்து மாறாமல், படைப்பாற்றல் சாத்தியமற்ற அனைத்தையும் சாத்தியமாக்குவோம்..! உங்கள் ஆதரவுகளோடும் அன்போடும்.
It is necessary to wait to fully understand the logic & reason I hold for the timing of the reveal. Your expectations are sure to be met with every step that we are to take. #PressRelease #THEIRONLADY @MenenNithya @onlynikil #JJayalalithaabiopic #Jayalalithaa #Amma #NithyaMenen pic.twitter.com/P4pNgZZK6L
— A Priyadhaarshini (@priyadhaarshini) November 2, 2019