விவாகரத்தான கணவருடன் மீண்டும் இணைந்த நடிகை லிசி? வைரல் புகைப்படங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் பிரியதர்ஷனை நடிகை லிசி விவாகரத்து செய்த நிலையில் தற்போது தனது மகனின் திருமணத்தின்போது மீண்டும் இருவரும் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதை ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.
தமிழ் மலையாள திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பிரியதர்ஷன் என்பதும் இவர் கடந்த 1990 ஆம் ஆண்டு நடிகை லிசியை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதிக்கு சித்தார்த் என்ற மகனும் கல்யாணி என்ற மகளும் உள்ளனர். தமிழ், தெலுங்கு ,மலையாள திரை உலகில் நடிகையாக கல்யாணி உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரியதர்ஷன் மற்றும் லிசி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். இதனை அடுத்து 26 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் பிரியதர்ஷன் - லிசி தம்பதியின் மகன் சித்தார்த் திருமணம் நேற்று நடைபெற்ற நிலையில் இந்த திருமணத்தின் போது பிரியதர்ஷன் மற்றும் லிஸி ஆகிய இருவருமே மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மணமக்களுடன் பிரியதர்சன், லிசி ஆகிய இருவரும் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments