அந்த நடிகையின் திறமையை வெளியே கொண்டு வந்தே தீருவேன்: அட்லி
Send us your feedback to audioarticles@vaarta.com
’ராஜா ராணி’ என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் அட்லி, அதன் பின்னர் விஜய் நடித்த ‘தெறி’, மெர்சல் மற்றும் ’பிகில்’ ஆகிய மூன்று விஜய் படங்களை தொடர்ந்து இயக்கினார். விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்கள் பட்டியலில் அட்லி பெயரும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் அட்லி அந்த நடிகையை கண்டிப்பாக மீண்டும் நடிக்க வைப்பேன் என்றும் அவருடைய திறமையை வெளியே கொண்டுவருவேன்’ என்றும் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ’அந்த நடிகை’ என்று அட்லி கூறியது தன்னுடைய மனைவி பிரியாவை என்பது குறிப்பிடத்தக்கது.
‘கனா காணும் காலங்கள்’ உள்பட ஒரு சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்த நடிகை பிரியா, சிங்கம், சிங்கம்-2 , நான் மகான் அல்ல உள்பட ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இருப்பினும் அட்லியை காதலித்து திருமணம் செய்த பின்னர் அவர் திரையுலகம் மற்றும் சின்னத்திரையுலகம் ஆகியவற்றில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார். ‘உனக்கு விருப்பமிருந்தால் தொடர்ந்து நடிக்கலாம் என அட்லியே பலமுறை கூறியும், பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று பிரியா கூறிவிட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் பிரியாவை மீண்டும் தன்னுடைய தயாரிப்பில் நடிக்க வைப்பேன் என்றும் அவர் திறமையான நடிகை என்பது எனக்கு தெரியும் என்றும் அவருடைய திறமையை நிச்சயம் ஒருநாள் வெளியே கொண்டு வருவேன் என்றும் இயக்குனர் அட்லி கூறியுள்ளார். எனவே அட்லியின் அடுத்த திரைப்படத்தில் பிரியாவுக்கு முக்கிய வேடம் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments