எனக்கு சொந்தமானதை ராகுல் காந்தி செய்துவிட்டார்: ப்ரியாவாரியர்

  • IndiaGlitz, [Saturday,July 21 2018]

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மலையாள நடிகை ப்ரியாவாரியர் 'ஒரு அதார் லவ்' என்ற படத்தின் டீசரில் கண்சிமிட்டியது மற்றும் புருவ நடனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த டீசர் வெளியான ஒரே நாளில் அவர் நாடு முழுவதும் புகழ் பெற்றார்.

இந்த நிலையில் நேற்று பாராளுமன்றத்தின் மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பேசினார். மத்திய அரசு மீதும் பிரதமர் மோடி மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்காக ஆவேசமாக கூறிய ராகுல்காந்தி பின்னர் பிரதமரை கட்டியணைத்து தனது இருக்கையில் உட்கார்ந்தார். அதன்பின்னர் காங்கிரஸ் எம்பிக்களை பார்த்து அவர் கண்சிமிட்டினார். ராகுல்காந்தியின் இந்த செய்கை பெரும் பரபரப்புடன் வைரலானது. பலர் ராகுல் கண்சிமிட்டலை ப்ரியாவாரியரின் கண்சிமிட்டலுடன் ஒப்பிட்டி மீம்ஸ் போட்டு வந்தனர்.

இந்த நிலையில் ராகுல்காந்தியின் கண்சிமிட்டல் குறித்து கருத்து தெரிவித்த ப்ரியாவாரியர், 'ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் கண்சிமிட்டியதை ரசித்து பார்த்தேன். மிகவும் அழகாக இருந்தது. நான் ஒரு திரைப்படத்தில் செய்ததை எனக்கு சொந்தமனதை ராகுல் செய்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது என்று கூறியுள்ளார்.

More News

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் யார்? புதிய தகவல்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் அஜித்தின் 59வது படத்தை  இயக்குவது யார்?

சிறந்த சர்வதேச நடிகர் போட்டியில் 'மெர்சல்' விஜய்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

'சீமராஜா' டிரைலர்-பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மதுரை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள 'சீமராஜா'

சுதந்திர தின கொண்டாட்டத்தில் கமல்ஹாசன் - விவியன் ரிச்சர்ட்ஸ்

கமல்ஹாசன் நடித்த 'சத்யா' திரைப்படத்தில் அன்றைய பிரபலமாக இருந்த மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் விவியன்  ரிச்சர்ட்ஸ் கெட்டப்பில் நடித்திருப்பார்.

டபுள் விருந்து தரும் நயன்தாரா - விஜய்சேதுபதி?

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' மற்றும் 'இமைக்கா நொடிகள்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில்