பேஸ்புக் மார்க் ஜுகர்பெர்கை பின்னுக்கு தள்ளிய பிரியாவாரியர்

  • IndiaGlitz, [Wednesday,February 21 2018]

கடந்த சில நாட்களாக இணையதளங்களின் வைரல் பிரியாவாரியர் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது புருவ நடனமும் ஒரே ஒரு கண் சிமிட்டலும் லட்சக்கணக்கான இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தது. ஒரு அடார் லவ்' படத்தின் டீசருக்கு பின்னர் பிரியாவாரியரின் சமூக வலைத்தள பக்கங்களில் ஃபாலோயர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது. கூகுள் தேடலிலும் சன்னிலியோன் உள்பட பாலிவுட் பிரபலங்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார்.

இந்த நிலையில் ஃபேஸ்புக் உரிமையாளர் மார்க் நிறுவனர் ஜுகர்பெர்கைக்கையும் பிரியாவாரியர் பின்னுக்கு தள்ளியுள்ள செய்தி தற்போது வெளிவந்துள்ளது. ஆம், ஃபேஸ்புக் உரிமையாளர் மார்க் ஜுகர்பெர்கைக் அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 40 லட்சம் ஃபாலோயர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் பிரியாவாரியரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு 45 லட்சம் ஃபாலோயர்கள் கிடைத்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஒருசில ஆயிரங்களில் ஃபாலோயர்களை வைத்திருந்த இவருக்கு திடீரென ஃபாலோயர்கள் குவிந்தது ஏன் என்பதை சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை

மேலும் ப்ரியாவாரியர் நடித்த ஒரு ஆடர் லவ் திரைப்படத்தில் வரும் அந்த ‘மணிக்கய மலரய பூவே’ பாடல் நாடு, மொழி, இனம் கடந்து மக்களை கவர்ந்துள்ளது. எகிப்து, அரபு, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் மொழி புரியாவிட்டாலும் கூட பிரியாவாரியரின் கண் சிமிட்டலுகாகவும் புருவ நடனத்திற்காகவும், ரசித்து அவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

More News

கமல் யாருக்கும் உதவாத ஒரு மரபணு மாற்றப்பட்ட விதை: அமைச்சர் ஜெயகுமார்

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது முதல் அரசியல் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ளார்.

லிப் டு லிப் புகைப்படத்தை ஏன் நீக்க வேண்டும்: கோஹ்லிக்கு ரசிகர்கள் கேள்வி

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லிக்கும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இத்தாலியில் திருமணம் நடந்தது

கமல்ஹாசனின் முதல் அரசியல் பயணத்தின் முக்கிய நிகழ்வுகள்

இன்று காலை முதல் அனைத்து ஊடகங்களும் கமல்ஹாசனை நோக்கியே இருந்தது. அவருடைய வாழ்வில் மட்டுமல்ல, தமிழகத்தின் அரசியல் வரலாற்றிலும் இன்று முக்கிய நாளாக கருதப்படுகிறது.

கமல்ஹாசனின் அரசியல் பயணம் குறித்து கருத்து கூறிய அஸ்வின்

உலகநாயகன் கமல்ஹாசன் இன்று காலை தனது அரசியல் பயணத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து ஆரம்பித்துவிட்டார்

டிஜிட்டல் மாற்றத்தினால் திரையுலகிற்கு உண்மையில் நன்மையா?

தமிழ்த்திரையுலகிற்கு போதாத காலம் என்றுதான் சொல்ல வேண்டும். 28% ஜிஎஸ்டி, சினிமா டிக்கெட் உயர்வு, 30% கேளிக்கை வரி, இதுபோதாதென்று பெப்சி வேலைநிறுத்தம், என பிரச்சனைகள் அதிகரித்து கொண்டே உள்ளது.