ப்ரியாவாரியர் மீதான வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
Send us your feedback to audioarticles@vaarta.com
புருவ நடனம் மற்றும் கண் சிமிட்டல் மூலம் ஒருசில நாட்களில் இணைய உலகத்தின் உச்சகட்ட புகழை பெற்றுவிட்ட மலையாள நடிகை பிரியாவாரியருக்கு கண்திருஷ்டி போல் அவர் மீது ஒருசில வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன,.
பிரியாவாரியர் நடித்து வரும் 'ஒரு ஆடார் லவ்' படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில் ஒரு குறிப்பிட்ட மதத்தை அவமதிக்கும் வகையில் பாடல் வரிகள் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐதராபாத், மும்பை உள்பட காவல்நிலையங்களில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
இந்த நிலையில் தன்மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் பிரியாவாரியர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து, இந்த மனுவை அவசர வழக்காக விசாரணை செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட் இன்று இந்த மனுவை விசாரணை செய்வதாக அறிவித்திருந்தது
இந்த நிலையில் பிரியாவாரியரின் மனு சற்றுமுன் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏஎம் கான்வாலிகர், டிஓய் சந்திரசூட் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “ நடிகை பிரியாவாரியர், படத்தயாரிப்பாளர் குழு உள்பட அனைவர் மீதான கிரிமனல் நடவடிக்கைக்கும் தடை விதிக்கப்படுவதாகவும், எதிர்காலத்திலும் அவர்கள் மீது மத உணர்வுகளை புண்படுத்திவிட்டதாகக் கூறி எந்தவிதமான முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யக்கூடாது” என்றும் கூறி உத்தரவிட்டனர். இந்த உத்தரவு பிரியாவாரியருக்கு மட்டுமின்றி அவரது கோடானு கோடி ரசிகர்களுக்கும் நிம்மதியை கொடுத்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com