கம்யூனிஸ்ட் கட்சியின் போஸ்டரில் கண்ணடிக்கும் ப்ரியாவாரியர்
Send us your feedback to audioarticles@vaarta.com
'ஒரு ஆடார் லவ்' படத்தின் நாயகி ப்ரியாவாரியர் அந்த படத்தின் டீசரில் ஒரு காட்சியில் ஆடிய புருவ நடனமும், கண்ணசைவும் இந்திய இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தது. ஒரே வாரத்தில் அவர் இந்தியா முழுவதும் பிரபலமானார். அவருக்கு தற்போது பல மொழிகளில் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இருப்பினும் ப்ரியாவாரியர் டீசரில் கண் அடிக்கும் காட்சி ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கைகளை பாதிக்கும் விதமாக இருப்பதாகவும் தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது
இந்த நிலையில் ப்ரியாவாரியரின் கண்ணடிக்கும் போஸ்டரை கம்யூனிஸ்ட் கட்சியினர் பயன்படுத்தியுள்ளனர். பொதுவாக கம்யூனிஸ்ட் கட்சியினர் சினிமா பிரபலங்களை நாடுவது கிடையாது. ஆனால் கேரளாவை சேர்ந்த சிபிஐ (எம்) கட்சியைச் சேர்ந்த மாணவர் பிரிவு சமீபத்தில் நடந்த ஒரு கருத்தரங்கை விளம்பரப்படுத்த தங்கள் கட்சியின் போஸ்டரில் ப்ரியாவாரியரின் கண்ணடிக்கும் புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளனர்.
இந்த போஸ்டர் கேரளாவின் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போஸ்டரை பயன்படுத்தியது குறித்து அக்கட்சியினர் கூறியபோது, 'ஒரு ஆடார் லவ்' படத்தில் நடித்த ப்ரியாவாரியர், மற்றும் இயக்குனருக்கு எதிராக வட இந்தியர்கள் வழக்கு தொடுத்துள்ளனர். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், ப்ரியாவாரியர் மற்றும் படக்குழுவினர்களுக்கு ஆதரவு கொடுக்கவே இந்த போஸ்டரை பயன்படுத்தியுள்ளோம். ப்ரியாவாரியர் கண்ணடித்தது ஒரு பெரிய விஷயமல்ல, இதற்கு எதிராக வழக்கு தொடுத்து ஒரு கலைஞரின் படைப்பு சுதந்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தான் இந்த போஸ்டரை பயன்படுத்தியுள்ளோம் என்று கூறினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments