கண்ணடித்து பிரபலமான பிரியா வாரியரா இப்படி? டாப் ஆங்கிள் கவர்ச்சி புகைப்படம் வைரல்!

  • IndiaGlitz, [Wednesday,June 21 2023]

மலையாள சினிமாவில் வெளியான 'ஒரு அடார் லவ்' திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரே ஒரு காட்சி நடித்து ஓவர் நைட்டில் உலகம் முழுவதும் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர்.

2019 இல் இயக்குநர் ஓமர் லூலு இயக்கத்தில் பள்ளிக் கூட காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் ‘ஒரு அடார் லவ்’. இந்தப் படத்தில் தன்னுடைய காதலனைப் பார்த்து புருவத்தை வளைத்து பிரியா வாரியர் க்யூட்டா கண்ணடித்து இருப்பார். படம் வெளிவருவதற்கு முன்பே இந்த ஒரு காட்சி வீடியோ இணையத்தில் வைரலாகி உலகம் முழுக்கவே பிரபலமானார். இதனால் அவருடைய சோஷியல் மீடியா ஃபாலோயர்களும் அதிகமாகினர்.

இதையடுத்து ‘ஒரு அடார் லவ்’ திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிப் பெறாவிட்டாலும் சமூகவலைத் தளத்தில் நடிகை பிரியா வாரியருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தே வந்தது. இதனால் அவருக்கு ஒருசில திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன.

அந்த வகையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ‘ஸ்ரீதேவி பங்களா’ எனும் பாலிவுட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருந்துவரும் நடிகை பிரியா வாரியர் தொடர்ந்து அதில் தன்னுடைய டிராவல் வீடியோக்களையும் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவந்த நிலையில் முதன் முதலாக கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் வெள்ளை நிறத்தில் கவர்ச்சியாக உடையணிந்திருக்கும் நடிகை பிரியா வாரியர் டாப் ஆங்கிளில் இருந்தபடியே காட்சியளிக்கிறார். இந்தப் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் கண்ணசைத்து பிரபலமான பிரியா வாரியரா இப்படி? ‘ஒரு அடார் லவ்’ திரைப்படத்தில் குட்டியாக இருந்தாரே? என்று ஆச்சர்யத்தை வெளியிட்டு வருகின்றனர்.

More News

ஜீ கர்தா-வில் எதற்கு இவ்வளவு ஆபாசம்? விமர்சனத்துக்கு இடையே நடிகை தமன்னா விளக்கம்!

சினிமாவில் அறிமுகமாகி 18 வருடங்கள் ஆன பிறகும் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை தமன்னா சமீபகாலமாக ஆபாசமான காட்சிகள் மற்றும் அந்தரங்க காட்சிகளில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படத்தில் லோகேஷ் கனகராஜ்.. மடோன் அஸ்வின் சொன்ன ஆச்சரிய தகவல்..!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'மாவீரன்' திரைப்படத்தை இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வரும் நிலையில் இந்த படத்திற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பல ஐடியாக்களை கொடுத்துள்ளதாக சமீபத்தில் அளித்த

தனுஷ் இதுவரை நடிக்காத கேரக்டர்.. ஆனந்த் எல்.ராய் படத்தின் மாஸ் தகவல்..!

தனுஷ் நடித்த இரண்டு பாலிவுட் திரைப்படங்கள் 'ராஜண்ணா' மற்றும் 'அட்ராங்கி ரே' ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் ஆனந்த் எல் ராய். இந்த நிலையில் தனுஷ் மற்றும் ஆனந்த் எல் ராய் மீண்டும் ஒரு

'கங்குவா' படப்பிடிப்பு முடிய இன்னும் இத்தனை மாதங்கள் ஆகுமா? அப்ப ரிலீஸ் எப்போது?

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு இறுதியில் அதாவது நவம்பர் மாதம் தான்

'சந்திரமுகி 2' படத்தில் 'குக் வித் கோமாளி' சீசன் 4 நடிகை.. வைரல் புகைப்படம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' திரைப்படம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் 17 ஆண்டுகளுக்கு கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு