கண்ணடித்து பிரபலமான பிரியா வாரியரா இப்படி? டாப் ஆங்கிள் கவர்ச்சி புகைப்படம் வைரல்!

  • IndiaGlitz, [Wednesday,June 21 2023]

மலையாள சினிமாவில் வெளியான 'ஒரு அடார் லவ்' திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரே ஒரு காட்சி நடித்து ஓவர் நைட்டில் உலகம் முழுவதும் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர்.

2019 இல் இயக்குநர் ஓமர் லூலு இயக்கத்தில் பள்ளிக் கூட காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் ‘ஒரு அடார் லவ்’. இந்தப் படத்தில் தன்னுடைய காதலனைப் பார்த்து புருவத்தை வளைத்து பிரியா வாரியர் க்யூட்டா கண்ணடித்து இருப்பார். படம் வெளிவருவதற்கு முன்பே இந்த ஒரு காட்சி வீடியோ இணையத்தில் வைரலாகி உலகம் முழுக்கவே பிரபலமானார். இதனால் அவருடைய சோஷியல் மீடியா ஃபாலோயர்களும் அதிகமாகினர்.

இதையடுத்து ‘ஒரு அடார் லவ்’ திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிப் பெறாவிட்டாலும் சமூகவலைத் தளத்தில் நடிகை பிரியா வாரியருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தே வந்தது. இதனால் அவருக்கு ஒருசில திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன.

அந்த வகையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ‘ஸ்ரீதேவி பங்களா’ எனும் பாலிவுட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருந்துவரும் நடிகை பிரியா வாரியர் தொடர்ந்து அதில் தன்னுடைய டிராவல் வீடியோக்களையும் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவந்த நிலையில் முதன் முதலாக கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் வெள்ளை நிறத்தில் கவர்ச்சியாக உடையணிந்திருக்கும் நடிகை பிரியா வாரியர் டாப் ஆங்கிளில் இருந்தபடியே காட்சியளிக்கிறார். இந்தப் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் கண்ணசைத்து பிரபலமான பிரியா வாரியரா இப்படி? ‘ஒரு அடார் லவ்’ திரைப்படத்தில் குட்டியாக இருந்தாரே? என்று ஆச்சர்யத்தை வெளியிட்டு வருகின்றனர்.