ப்ரியா பிரகாஷ் வாரியரா இது? உச்சகட்ட கிளாமரால் ரசிகர்கள் அதிர்ச்சி!

  • IndiaGlitz, [Thursday,July 01 2021]

ஒரே ஒரு கண்ணசைவில் உலக புகழ் பெற்றவர் நடிகை ப்ரியா பிரகாஷ்வாரியர் என்பதும் ’ஒரு ஆதார் லவ்’ படத்தின் டிரைலரில் சக மாணவரை அவர் புருவ நடனத்துடன் கூடிய கண்ணடிக்கும் காட்சி உலக அளவில் பிரபலம் ஆனது என்பதும் தெரிந்ததே

‘ஒரு ஆதார் லவ்’ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் கண்ணசைவு காட்சி காரணமாக ப்ரியா பிரகாஷ் வாரியருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ளார் என்பதும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 7 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ப்ரியா பிரகாஷ் வாரியர் திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உச்சகட்ட கவர்ச்சியுடன் கூடிய ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஒரு பக்கம் இன்ப அதிர்ச்சி அடைந்தாலும், இன்னொரு பக்கம் பிரியா பிரகாஷ் வாரியரா இது? என்று ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்று குறிப்பிடத்தக்கது