ஒரே வாரத்தில் அகில இந்திய பிரபலங்களை ஓரங்கட்டிய புருவ டான்ஸ் அழகி

  • IndiaGlitz, [Tuesday,February 13 2018]

புருவ டான்ஸ் அழகி பிரியாவாரியர் கடந்த சில நாட்களாக இணையதளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. ஒரே ஒரு படத்தின் டீசர், இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது மட்டுமின்றி அகில இந்திய அளவில் உள்ள திரையுலக பிரமுகர்களையும் பிரியாவாரியர் பின்னுக்கு தள்ளிவிட்ட தகவல் தற்போது கிடைத்துள்ளது

கடந்த ஒரு வாரத்தில் கூகுள் இந்தியா டிரெண்ட் அனலைசிஸ் மூலம் இணையத்தில் தேடப்பட்ட பிரபலங்களில் பட்டியலில் சன்னிலியோன் அலியா பட், காத்ரினா கைஃப் ஆகியோர்களை ஓரங்கட்டி பிரியா வாரியர் முன்னிலை பெற்றுள்ளார் என தெரியவந்துள்ளது.

பிரியாவின் பெயரை மில்லியன் கணக்கானோர் தேடியுள்ளதாகவும் கூகுள் இந்தியாவின் டேட்டா கூறியிருப்பது உண்மையில் பெரும் ஆச்சரியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. பிர்யாவாரியரின் 'ஒரு ஆடார் லவ்' என்ற திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்தது என்பதும், அதில் மாணவியாக நடித்திருக்கும் பிரியாவாரியர் சக மாணவரை பார்த்து கண்சிமிட்டி, புருவ நடனம் ஆடியது இன்று வரை டிரெண்டில் உள்ளது என்பதும் அனைவரும் அறிந்ததே.