என்ன ஒரு தெய்வீக சிரிப்பு: சதீஷை கலாய்த்த பிரபல நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் சதீஷ் நாயகனாக நடிக்கிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். மேலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த படத்தில் ‘குக் வித் கோமாளி’ பவித்ராவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கின்றார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் விரைவில் சன்னிலியோன் இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சதீஷ் ஜோடியாக சன்னி லியோன் நடிக்கிறார் என்ற தகவல் இணையதளங்களில் கசிந்து வரும் வகையில் பிரபல நடிகை பிரியா பவானிசங்கர் இது குறித்த புகைப்படங்களை பதிவு செய்து ’என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா எமக்கு? இதுவரை தமிழகம் கண்டிராத சிரிப்பு’ என்று கலாய்த்துள்ளார்.
பிரியா பவானி சங்கரின் இந்த டுவிட்டுக்கு இந்த படத்தில் நடிக்கும் ரமேஷ் திலக் உள்பட பலரும் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா உமக்கு☺️ இதுவரை தமிழகம் கண்டிராத சிரிப்பு ☺️ @actorsathish pic.twitter.com/ylqJ4xgbb0
— Priya BhavaniShankar (@priya_Bshankar) April 22, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments