எஸ்.ஜே.சூர்யா தான் பதட்டமாகிவிட்டார்: ப்ரியா பவானிசங்கர்

  • IndiaGlitz, [Tuesday,March 03 2020]

எஸ்ஜே சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் ’மான்ஸ்டர்’ என்ற படத்தில் இணைந்து நடித்ததை அடுத்து சமீபத்தில் ’பொம்மை’ என்ற படத்திலும் இணைந்து நடித்தனர். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எஸ்ஜே சூர்யா, ப்ரியா பவானிசங்கரை காதலித்ததாகவும் ஆனால் பிரியா பவானி சங்கர் அதை ஏற்க மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியானது. அதுமட்டுமன்றி ப்ரியா பவானிசங்கர் காதலித்து வரும் நபர் குறித்தும் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் எஸ்ஜே சூர்யா உடன் தன்னை இணைத்து வந்த கிசுகிசு குறித்து இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருந்த ப்ரியா பவானிசங்கர் தற்போது முதன் முதலாக இதற்கு விளக்கம் அளித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யாவையும் என்னையும் பற்றி வெளியான வதந்திக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதனால்தான் அதற்கு விளக்கம் அளிக்கவில்லை. ஆனால் எஸ்ஜே சூர்யா தான் பதட்டமடைந்து அதற்கு பதில் சொல்லியதால் இந்த விஷயத்தை ஊடகங்கள் பெரிதாகிவிட்டது.

எங்களுக்குள் நிஜத்தில் காதல் எதுவும் இல்லை. என்னுடைய பெரிய கவலை என்னவென்றால் என்னைப்பற்றி ஏதாவது கிசுகிசு வெளிவந்தால் என்னுடைய தோழிகள் கிண்டல் செய்வார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது என்பது தான் எனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

முன்னதாக எஸ்ஜே சூர்யா இந்த வதந்தி குறித்து கருத்து தெரிவித்தபோது ’பிரியா பவானிசங்கர் தனக்கு நல்ல தோழி என்றும் எங்களுக்குள் காதல் எதுவும் கிடையாது என்றும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.