பிரேக் அப் வதந்திக்கு ப்ரியா பவானிசங்கரின் ரியாக்சன்!
- IndiaGlitz, [Sunday,May 17 2020]
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான ப்ரியா பவானி சங்கர் குறித்து கடந்த சில மாதங்களாகவே சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே எஸ்ஜே சூர்யாவுடன் காதல் என்று ஒரு வதந்தி கிளம்பிய நிலையில் அந்த வதந்தியை இருவருமே மறுத்தனர்.
அதன் பின்னர் தன்னுடைய கல்லூரி கால நண்பரான ராஜவேல் என்பவருடன் காதல் என்பது குறித்த பதிவை இன்ஸ்டாகிராமில் நடிகை பிரியா பவானி சங்கர் பதிவு செய்தார். இதனை அடுத்து திடீரென அவர் பதிவு செய்த ஒரு இன்ஸ்டாகிராம் பதிவை வைத்து அவருடைய காதல் பிரேக் அப் ஆகி விட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் கிளம்பியது. இதனையடுத்து அவரது தரப்பினர் விளக்கம் அளித்தபோது ’பிரியா பவானி சங்கரின் காதலுக்கும் அந்த பதிவுவுக்கும் எந்த சம்பந்தமில்லை என்று விளக்கமளிக்கப்பட்டது.
இந்த நிலையில் தனது பிரேக் அப் குறித்த வதந்திகளை அவர் படித்து சிரிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பிரியா பவானி சங்கர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் தன்னை பற்றிய வதந்திகளை படித்து தான் ரசித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ப்ரியா பவானிசங்கர் சிரிக்கும் இந்த புகைப்படமும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on InstagramReading Gossips about ownself be like ??????♀️
A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on May 17, 2020 at 5:04am PDT