close
Choose your channels

முடிவடையும் நிலையில் பிரியா பவானிசங்கரின் அடுத்த படம்

Saturday, April 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடித்து கொண்டிருந்த நடிகை பிரியா பவானிசங்கர், நேற்று வெளியான 'மெர்க்குரி' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவருடைய நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடித்த படம் ஒன்றின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு கோலிவுட் வேலைநிறுத்தம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நாளை முதல் மீண்டும் தொடங்கவுள்ளது. இன்னும் நான்கே நாட்களில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்றும் அதன் பின்னர் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கவுள்ளதாகாவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தை 'ஒருநாள் கூத்து' பட இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கி வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து கார்த்தி நடித்து வரும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்திலும் பிரியா பவானிசங்கர் முக்கிய வேடம் ஒன்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment