கோலிவுட் திரையுலகில் எண்ட்ரி ஆகும் பிரபல தொலைக்காட்சி நடிகை

  • IndiaGlitz, [Monday,June 05 2017]

பொதுவாக நடிகர்கள் பலர் தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு வருவதை பார்த்திருக்கின்றோம். சந்தானம், சிவகார்த்திகேயன் உள்பட பலரை இதற்கு உதாரணமாக கூற முடியும். ஆனால் நடிகைகளை பொறுத்தவரை சினிமாவில் இருந்து தான் தொலைக்காட்சி சென்றதாக பல உதாரணங்கள் உண்டு.
ஆனால் தற்போது 'கல்யாணம் முதல் காதல் வரை' என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் நடிகை ப்ரியா பவானிசங்கர் விரைவில் கோலிவுட் திரையுலகில் நாயகியாக ஒரு படத்தில் அறிமுகமாக உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இவர் எந்த படத்தில் எந்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்பது குறித்த தகவல்கள் மிக விரைவில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் தான் ப்ரியா படிப்பிற்காக வெளிநாடு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.