உனக்கென்னப்பா சூப்பர் ஹீரோயின் கிடைச்சுட்டாங்க… நடிகர் சதீஷை கலாய்த்த பிரபலம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழில் “மேயாதமான்” படத்தில் அறிமுகமானவர் இளம் நடிகை ப்ரியா பவானி சங்கர். மேலும் இவர் அறிமுகமான முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர் பட்டாளத்தையும் பெற்றுவிட்டார். அந்த அளவிற்கு வசீகரமான முகத்தைக் கொண்டு இளசுகளை ஆட்டிப் படைக்கும் ப்ரியா பவானி சங்கர் அடுத்தடுத்து “கடைக்குட்டி சிங்கம்”, “களத்தில் சந்திப்போம்”, “மான்ஸ்டர்”, “மாஃபியா” போன்ற படங்களில் நடித்து இருந்தார்.
தற்போது “இந்தியன் 2”, “பத்துத்தல“, “ருத்ரம்” போன்ற படங்களில் பிசியாக நடித்துவரும் இவர் டிவிட்டரில் நகைச்சுவை நடிகர் சதீஷை கலாய்த்துத் தள்ளி இருக்கிறார். நடிகர் சதீஷ் கடந்த 2010 ஆம் ஆண்டு “தமிழ்படம்” மூலம் தமிழுக்கு அறிமுகமானவர். மேலும் ஏராளமான மேடை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் இவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கொண்டு இருக்கிறார். மேலும் தற்போது “அண்ணாத்த” போன்ற முன்னணி படங்களிலும் நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சதீஷ் முதல் முறையாக ஹீரோவாகவும் களம் இறங்க உள்ளார். இவர் நடிக்கவுள்ள இந்தப் படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் யாக்கர் ஃபிலிம்ஸ் என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் கிஷோர் ராஜ்குமார் என்பவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இந்தப் படத்தில் குக்வித் கோமாளி பிரபலம் பவித்ரா ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று நடிகை ப்ரியா பவானி சங்கர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “நான் என்ன நினைக்கிறேன்” என்று கேள்வியோடு ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். இந்தப் புகைப்படத்திற்கு கமெண்ட் பதிவிட்ட நடிகர் சதீஷ், “சதீஷ் கூட ஹீரோயினா நடிக்க முடியாம போச்சே” என்று நினைத்துக் கொண்டு இருப்பதாக கமெண்ட் பதிவிட்டு இருந்தார்.
இந்த கமெண்டை பார்த்த ப்ரியா உடனடியாக “உனக்கென்னப்பா சூப்பரா ஒரு ஹீரோயின் கிடைச்சுட்டாங்க” எனக் கலாய்த்து தள்ளியிருக்கிறார். இப்படி நடிகை ப்ரியா பவானி சங்கர் மற்றும் நடிகர் சதீஷ் இருவரும் டிவிட்டரில் பேசிக்கொண்ட பதிவுகள் தற்போது சமூக வலைத்தளப் பக்கத்தில் ரசிகர்களிடையே அதிக கவனம் பெற்று இருக்கிறது.
Sathish kooda heroine aa nadikka mudiyaama poche.... ?????? https://t.co/c0QPq7H9Zp
— Sathish (@actorsathish) April 11, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments