கார்த்தியின் அடுத்த பட நாயகியாகும் பிரபல சீரியல் நடிகை

  • IndiaGlitz, [Saturday,October 21 2017]

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியலில் நடித்து வரும் ப்ரியா பவானிசங்கர் நடித்த 'மேயாத மான்' கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது கார்த்தியின் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க ப்ரியா பவானிசங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

'தீரன் அத்தியாயம் ஒன்று' படத்தை அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். கிராமிய படமான இந்த படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்க ப்ரியா பவானிசங்கரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதே கேரக்டருக்கான 'வனமகன்' புகழ் சாயிஷாவிடமும் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி இந்த படத்தின் இன்னொரு நாயகியாக 'பிரேமம்' புகழ் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

More News

ஆன்லைன் பைரஸியை சமாளிக்க தயாரிப்பாளர் சங்கத்தின் புது ஐடியா

திரைத்துறையினர் தற்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையாக ஆன்லைன் பைரஸி உள்ளது. படம் வெளிவந்த மறுநாளே ஆன்லைனில் படம் வெளியாகிவிடுவதால் மிகப்பெரிய அளவில் வசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது

கமல் மன்னிப்பு கேட்க வேண்டிய தவறுகள் நிறைய உள்ளன: தமிழிசை

கடந்த சில மாதங்களாகவே பாஜகவினர் அரசியல் கட்சிகளை எதிர்த்து அரசியல் செய்யாமல் நடிகர்களை எதிர்த்தே அரசியல் செய்து வருகின்றனர். குறிப்பாக கமல்ஹாசன்,

மெர்சலுக்கே இப்படின்னா 'பராசக்தி' இன்று வந்திருந்தால்? ப.சிதம்பரம்

தளபதி 'மெர்சல்' படம் வெற்றி பெற்றதற்கு விஜய் ரசிகர்களை விட இலவச புரமோஷன் செய்து வரும் அரசியல்வாதிகளுக்குத்தான் உண்மையில் 'மெர்சல்' படக்குழுவினர் நன்றி கூற வேண்டும்...

மெர்சலுக்காக குரல் கொடுத்த கமல்ஹாசன்

பொதுவாக விஜய் நடித்த திரைப்படங்கள் ரிலீசுக்கு முன்பு பிரச்சனைகளை சந்தித்து வருவது வழக்கம். ஆனால் 'மெர்சல்' திரைப்படம் மட்டும் ரிலீசுக்கு முன்பும், பின்பும் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.

'மெர்சல்' படம் பார்த்து பாராட்டு தெரிவித்த வைகோ

'தளபதி' விஜய்யின் 'மெர்சல்' திரைப்படம் ஒரு திரைப்படம் என்பதையும் தாண்டி ஒரு சமுதாய பிரச்சனையாக கடந்த இரண்டு நாட்களாக நாடு முழுவதும் விவாதம் செய்யப்பட்டு வருகிறது.