'சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்' கூட்டணியில் இணைந்த பிரியா பவானிசங்கர்

  • IndiaGlitz, [Saturday,September 21 2019]

கடந்த ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று வெளியான படங்களில் ஒன்று விஷ்ணு விஷாலின் ’சிலுக்குவார்பட்டி சிங்கம்’. விஷ்ணுவிஷால், ரெஜினா நடிப்பில் செல்லா அய்யாவு இயக்கிய இந்தப் படம் காமெடி மற்றும் ஆக்சன் கலந்த ஒரு பொழுதுபோக்கு படமாக அமைந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியை அடுத்து தற்போது இதே கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. செல்லா அய்யாவு இயக்கும் அடுத்த படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியா பவானிசங்கர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது.

’சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தைப் போலவே இந்தப் படமும் ஆக்சன் மற்றும் காமெடி எண்டர்டெயினர் படம் என்றும், இந்த படத்தில் ப்ரியா பவானிசங்கருக்கு அதிரடி ஆக்சன் காட்சிகளும் இருப்பதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து தற்போது பிரியா பவானிசங்கர் ஆக்சன் காட்சிகளில் நடிக்க பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் தொடங்க இருப்பதாக படக்குழுவினர் தகவல் கசிந்துள்ளது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது.