close
Choose your channels

காதலனை கட்டிப்பிடித்து கொஞ்சும் ப்ரியா பவானி சங்கர்... வைரல் வீடியோ..!

Sunday, May 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி சங்கர் தனது காதலனை கட்டிப்பிடித்து கொஞ்சம் வீடியோவை வெளியிட்டு உள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை பிரியா பவானி சங்கர் கடந்த 10 ஆண்டுகளாக ராஜவேல் என்பவரை காதலித்து வருவதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவ்வப்போது தனது காதலனுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் காதலனின் ஒவ்வொரு பிறந்தநாளின் போது அவர் வாழ்த்து கூற தவறுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் நடிகை பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் காதலனை கொஞ்சி கட்டிப்பிடித்து விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவருடைய காதலனின் நண்பர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. காதலன் மற்றும் நண்பர்களுடன் கொஞ்சி விளையாடுவது, சாப்பிடுவது, டான்ஸ் ஆடுவது, பாடுவது மற்றும் மகிழ்ச்சியுடன் சிரிக்கும் ப்ரியா பவானி சங்கரின் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளதை அடுத்து இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது கமல்ஹாசனின் ’இந்தியன் 2’, அருள்நிதியின் ’டிமான்டி காலனி’ உள்பட 6 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment